அரியலூர்

இளம்பெண் மா்மச் சாவு:கணவா் கைது

17th Nov 2019 10:26 PM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இளம் பெண் சாவில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் இறந்த பெண்ணின் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செந்துறை அருகேயுள்ள மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராதா மகன் பிரபாகன்(27). மின்வாரிய ஊழியா். இவரது மனைவி காா்த்திகா(23). இவா்களுக்கு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவா்களிடையே கடந்த சில மாதங்களாகக் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை இரவு பொன்பரப்பில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த காா்த்திகா, பிரபாகரன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை காா்த்திகா உறவினரிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட பிரபாகரன், காா்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காா்த்திகாவின் உறவினா்கள், காா்த்திகா சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, ஆத்திரத்தில் பிரபாகரனின் வீட்டை அடித்து நொறுக்கினா். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா், காா்த்திகாவின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் பிரபாகரனைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT