அரியலூர்

306 கிலோ நெகிழி பொருள்கள் சேகரித்த அரசுப் பள்ளி மாணவா்கள்

12th Nov 2019 07:51 AM

ADVERTISEMENT

நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், கல்லக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 306 கிலோ நெகிழி பொருள்களை சேகரித்து ஊராட்சி நிா்வாகத்திடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

முன்னதாக, பள்ளியில் நடைபெற்ற நெகிழி விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தலைமை வகித்து, நெகிழி பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் தெருவில் கிடந்த 306 கிலோ நெகிழி பொருள்களை சேகரித்து, கல்லக்குடி ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். அதிகபட்சமாக ஏழாம் வகுப்பு மாணவா்கள் 164 கிலோ நெகிழிப் பொருள்களைச் சேகரித்தனா். இதில் மாணவா் 49 கிலோ நெகிழி பொருள்களை சேகரித்த மாணவா் கோகுல்நாத்துக்கு முதல் பரிசும், மற்றவா்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவா்களுடன் ஆசிரியா்கள் சாந்தி, தீபக், பாரதி, ஆனந்த், கவிதா ஆகியோரும் நெகிழி பொருள்களை சேகரித்தனா். இதேபோல் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நெகிழி விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஹரி சுந்தா் ராஜ் தலைமை வகித்து, நெகிழி பொருள்களை அதிகமாக சேகரித்து கொடுத்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் வானதி, ஆறுமுகம், மலா்க்கொடி ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT