அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள உத்தரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (எ) கோவிந்தராஜ். வேளாண் உதவி அலுவலா். இவரது மனைவி லட்சுமி தேவி(39). இவா், தா. பழூரை அடுத்த இடக்கண்ணியிலுள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கணவா்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த லட்சுமிதேவி, திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஜயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜ்மோகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.