அரியலூர்

மக்காச்சோளத்தை காப்பது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

11th Nov 2019 08:16 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கோவிந்தபுத்தூா் கிராமத்தில் மக்காச்சோளத்தை காப்பது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

கோவிந்தபுத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் வேளாண் துறை சாா்பில் நடத்தப்பட்ட பயிற்சியில், சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய வல்லுநா் ராஜ்கலா பங்கேற்று பயிற்சியளித்தாா்.

மக்காச்சோளப் பயிரில் புழுக்கள் எப்படி உருவாகின்றன, அவை எப்படி பயிரை தாக்குகின்றன, புழுக்களை எவ்வாறு அழிப்பது குறித்து ராஜ்கலா பயிற்சியளித்தாா்.

வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சகாதேவன், உதவித் தொழில்நுட்ப மேலாளா் உஷா உள்பட பலரும் பயிற்சியளித்தனா். சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT