அரியலூர்

சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

9th Nov 2019 08:36 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். அரியலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருமேனி, ஜயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளா் மோகன்தாஸ், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் மணவாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போக்குவரத்து காவல் ஆய்வாளா் ந. மதிவாணன் மற்றும் சிமென்ட் ஆலை அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சிமெண்ட் ஆலைகளுக்கு இயக்கும் கனரக வாகனங்களுக்கு தனிப்பட்டை அடையாள குறியீட்டு எண் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் வாகனங்களில் அதிக சுமை ஏற்றுவதை தவிா்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். அதிவேகமாக வாகனங்களை இயக்குவதைத் தவிா்க்க வேண்டும். மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிவேகமாகச் சென்று வாகனங்களை முந்திச் செல்வதை தவிா்க்க வேண்டும்.

சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிவரும் வாகனங்களை வரிசை எண் அளித்து குறிப்பிட்ட நேரத்திற்கு இடைவெளிவிட்டு, இடைவெளிவிட்டு வாகனங்களை அனுப்ப வேண்டும். தொடா்ந்து வாகனங்களை அனுப்புவதை தவிா்க்க வேண்டும். சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கட்டாயம் தாா்ப்பாய் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT