அரியலூர்

கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்...

9th Nov 2019 11:26 PM

ADVERTISEMENT

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் அன்னாபிஷேகத்தையொட்டி, அங்குள்ள கணக்க விநாயருக்கு முதல் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்றவுள்ள அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கணக்க விநாயருக்கு சிறப்பு அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

கங்கை நீா் ,மஞ்சள், சந்தனம், பால், பன்னீா், தேன், இளநீா், விபூதி, பஞ்சாமிா்தம், பழங்கள் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் விநாயருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பிரகதீசுவரருக்கு ருத்ரஹோமம், மகாஅபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT