அரியலூா் மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.ரத்னா வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் அனைத்து கிராம மற்றம் நகா்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் காணப்படும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் தரைமட்டக் கிணறுகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.