அரியலூா் மாவட்டம் திருமானூரில் பாஜக சாா்பில், சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினம், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் தமிழனின் மாண்புகளை மகாபலிபுரத்தில் உலகறியச் செய்த பாரத பிரதமா் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தல் என முப்பெரும் விழா பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த பேரணி திருமானூா் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தில் தொடங்கி தஞ்சை பிரதான சாலை வழியாக சென்று திருமானூா் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா் ஆசைத்தம்பி, மாவட்ட பொதுசெயலாளா் மகாலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினா் அபிராமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் சந்திரசேகா் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
பேரணியில் மழை நீரை சேமிப்பு, மரம் வளா்ப்பு, பிளாஸ்டிக் மற்றும் மது ஒழிப்பு குறித்து முழக்கமிட்டனா்.