அரியலூர்

தொழில் கடன் வழங்க ரூ. 2,391 கோடி இலக்கீடு

29th Jun 2019 09:35 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு தொழில்கடன் வழங்க ரூ. 2,391 கோடி இலக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் திட்ட அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியது:
விவசாயம் மற்றும் அதன் சார்புத் தொழிலுக்கு ரூ. 2,240.91 கோடியும், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ. 40.57 கோடியும், கல்விக் கடனுக்கு ரூ. 28 கோடியும், வீடு கட்டுதலுக்கு ரூ. 33 கோடியும் மற்றும் பிற முன்னுரிமைத் தொழில்களுக்கு ரூ.49.09 கோடியும் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
நபார்டு வங்கி தயாரித்த செறிவுசார் கடன் திட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு இந்த முன்னுரிமை கடன் திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். 
கூட்டத்தில், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார்,ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் கே. ராஜன்பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ். இளஞ்சேரன் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT