அரியலூர்

முன் விரோதத் தகராறு: ஒருவர் கைது

31st Jul 2019 10:09 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே முன்விரோதத் தகராறில் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் அருகேயுள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் மகன் செல்வமணி(25). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை மகன் வல்லரசு என்பவருக்கும் முன்விரோதத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை 
செல்வமணி அவரது வீட்டின் அருகேயுள்ள குழாயில் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வல்லரசு செல்வமணியைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து வல்லரசை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT