அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தா.பழூர் அருகேயுள்ள உதயநத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்தாண்டு மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர்கள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டுமெனக்கூறி பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தா.பழூர் போலீஸார் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களின் கோரிக்கை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.