அரியலூர்

செந்துறை மகாசக்தி மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

29th Jul 2019 10:27 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், செந்துறை  அருள்மிகு  மகாசக்தி மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செந்துறை நெய்வனம் பகுதியில் அமைந்துள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பால்குட விழா நடப்பது வழக்கம். 
அதேபோல் நிகழாண்டுக்கான பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி  கிராமத்திலுள்ள ஏந்தல் ஏரி விநாயகர் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை அடைந்தனர்.
தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடனைச் செலுத்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT