உடையார்பாளையம் அருகே மது விற்ற 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீஸார், வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வானத்திரையாண்பட்டினத்தைச் சேர்ந்த அஞ்சலை(50),நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த இளையராஜா(42) ஆகிய இருவரும், தங்களது வீட்டின் பின்புறப் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து, 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.