அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர், விளாங்குடி பகுதியிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சில கடைகளில் புகையிலை வகைகளும், 30 கிலோ மதிப்பிலான தடைசெய்யப்பட்டநெகிழிப் பொருள்களும் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ. 1,700 அபராதம் விதித்தனர்.