அரியலூர்

திருமானூர் பகுதிகளில்  கிறிஸ்தவ நல்லெண்ண  இயக்கம் தொடக்கம்

22nd Jul 2019 09:51 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குள்பட்ட 24 கிராமங்களில், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கிளைகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
கிறிஸ்தவ ஒற்றுமைத் தினத்தையொட்டி,  திருமானூர் ஒன்றியத்திலுள்ள திருவெங்கனூர், சுள்ளங்குடி, கீழவரப்பன்குறிச்சி, ஏலாக்குறிச்சி, வடுகப்பாளையம், கிழப்பழுவூர் உள்ளிட்ட 24 கிராமங்களில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தொடக்க விழா நடைபெற்றது.
திருமானூரில் நடைபெற்ற விழாவுக்கு,அந்த இயக்கத்தின் மாவட்டச் செயலர் ஜோசப் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.  பங்குத் தந்தைகள் திருமானூர் ஜேம்ஸ், ஏலாக்குறிச்சி சுவக்கின் முன்னிலை வகித்தனர். 
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனத் தலைவர் இனிகோ இருதயராஜ் விழாவில் பங்கேற்று, இயக்கக் கிளையின் பெயர் பலகையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியது: 
இந்த இயக்கம் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். மேலும் கிராமத்துக்குத் தேவையான  அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 இயக்கத்தின் மாநிலத் துணை அமைப்புச் செயலாளர்கள் அலெக்ஸ்ராஜா, ஜஸ்டின் சில்வஸ்டர், கொள்கைப்பரப்புச் செயலர் ஜான்பிரகாஷ் உள்பட பலரும் பலந்து கொண்டனர். 
முன்னதாக மாவட்ட அவைத்தலைவர் சின்னப்பராஜ் வரவேற்றார். இதுபோல மற்ற கிராமங்களிலும் விழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT