அரியலூர்

6 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

18th Jul 2019 04:40 AM

ADVERTISEMENT


அரியலூர் மாவட்டத்தில் பொட்டவெளி, கோவில்எசனை (மே), அங்கராயநல்லூர் (மே), சோழமாதேவி, பொன்பரப்பி, காட்டாத்தூர் (வ)  ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
தொடர்புடைய பகுதிகளின் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்  தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT