அரியலூர்

டெல்டா பகுதிக்குள்ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது

18th Jul 2019 04:40 AM

ADVERTISEMENT


ஹைட் ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டா  சமவெளிப் பகுதியில் அனுமதிக்கக் கூடாது என காவிரி பாசனதாரர் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி தனியார் திருமண மண்டபத்தில் கல்லணைக் கால்வாய்  காவிரி பாசனதாரர் கூட்டமைப்பு கூட்டம் சங்கத்தின் தலைவர் அத்தாணி ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
அனைத்து நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில்,  காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் 
இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு  கூட்டியக்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுக்கும்  போராட்டம் வரும் செவ்வாய்க் கிழமை(ஜூலை 23) நடைபெறவுள்ள இந்த ஊர்வலத்தில் அறந்தாங்கி விவசாயிகள்  திரளாகப் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்  அனைத்து விவசாயிகளும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகி மு.மாதவன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT