அரியலூர்- கீழப்பளுவூர் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திங்கள்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இரவு 7 மணிக்கு சார்-பதிவாளர் அலவலகத்துக்குள் நுழைந்து, கதவை உள்புறம் தாழிட்டுக் கொண்டு சோதனையை தொடங்கினர். அலுவலகத்துக்குள் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இரவு 10 மணி வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சார்பதிவாளர் வனஜாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.