அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9445853675 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.