அரியலூர்

காவனூரில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

4th Jul 2019 09:19 AM

ADVERTISEMENT

அரியலூர் அருகேயுள்ள காவனூர் கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டு வேளாண் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண் இணை இயக்குநர் (பொ) பழனிசாமி தலைமை வகித்து,மானாவாரி நில மேம்பாட்டு இயக்க நடவடிக்கைகள், நீள் இழைப் பருத்தி சாகுபடி முறைகள் மற்றும் நன்மைகள்,சொட்டு நீர் சாகுபடியின் பயன்பாடு, பயிர்க்காப்பீடு திட்டம்,நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.வேளாண் உதவி இயக்குநர் க. பூவலிங்கம் முன்னிலை வகித்து, பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, கோடை உழவு, மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் பற்றி தெரிவித்தார். வேளாண் அலுவலர் அ. சவீதா கலந்து கொண்டு, கோடை உழவு மற்றும் பயிர் பாதுகாப்பு மானியம் பெற சிட்டா அடங்கள் வங்கிக் கணக்கு எண் ஆதார் எண் போன்றவற்றை இணைத்து உதவி வேளாண் அலுவலர் எம். வேல்முருகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
பயிற்சியில் கலந்து கொண்ட 110 விவசாயிகளுக்கு கையேடு வழங்கப்பட்டது. துணை வேளாண் அலுலவர் அ.இளவரன் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி,உதவி தொழில்நுட்ப மேலாளர் செ. சுந்தரமூர்த்தி மற்றும் வேளாண் அலுவலர்கள் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT