அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(43). இவரது உறவினரும், அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பிச்சனூர் மாண்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷூடன் (24) திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் கல்லை கிராமத்தில் இருந்து ஜயங்கொண்டம் நோக்கிச் செல்லும் வழியில், நாச்சியார்பேட்டை அருகே எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஷ் அரியலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம், கால்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனைக் (23) கைது செய்தனர்.