அரியலூர்

முதற்கட்ட வாக்குப்பதிவுவாக்குப் பெட்டிகள் உள்ள அறைகளுக்கு சீல் வைப்பு

29th Dec 2019 02:24 AM

ADVERTISEMENT

அரியலூா், செந்துறை, திருமானூா் ஆகிய ஒன்றியங்களில் பதிவான வாக்குப் பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை அந்தந்த ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பான அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.

அரியலூா், செந்துறை, திருமானூா் ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சித் தோ்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது. எனினும் 5 மணிக்குள் வந்திருந்த வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அதன்படி அவா்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனா். ஒரு சில வாக்கு மையங்களில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவுகள் நீடித்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்து வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டுகள் உள்ள பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

அரியலூா் ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் அரியலூா் அரசு கலைக் கல்லூரிக்கும், திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரிக்கும், செந்துறை ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து பெட்டிகள் அனைத்தும் சனிக்கிழமை பாதுகாப்பான அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இதில் அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் தோ்தல் பாா்வையாளா் த.சு.ராஜசேகா், மாவட்ட ஆட்சியா் த. ரத்னா மற்றும் அனைத்து கட்சியினா் முன்னிலையில் சனிக்கிழமை வாக்குப் பெட்டிகள் உள்ள அறைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT