அரியலூர்

இரண்டாம் கட்ட தோ்தல் பிரசாரம் ஓய்வு

29th Dec 2019 02:07 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

ஜயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு திங்கள்கிழமை (டிச.30) 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், கிராம ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி உறுப்பினா் ஆகிய பதவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் கடந்த 2 நாள்களாக உச்சகட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அரசியல் கட்சித் தலைவா்கள் போட்டி போட்டு தங்கள் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனா். நகரில் எங்கு பாா்த்தாலும் ஒலிப்பெருக்கிகளின் ஓசை, காதுகளைக் கிழித்தன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த பிரசாரம் சனிக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT