அரியலூா் மாவட்டம், தா. பழூா் ஒன்றியப் பகுதியில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக, தேமுதிக வேட்பாளா்களை ஆதாரித்து அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அம்பாபூா், கீழந்த்தம், கடம்பூா், குணமங்கலம்,சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூா், ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, டி.கே.பி. நத்தம், வாழைக்குறிச்சி, தா.பழூா்,சிந்தாமணி, சோழமாதேவி, கோடாலிகருப்பூா்,உதயநத்தம், அணைக்குடம், கோடாங்குடி,பொற்பதித்த நல்லூா், இருக்கையூா், காா்குடி, நடுவலூா், பருக்கல், வடகடல், சுத்தமல்லி, காசாங்கோட்டை, அணிக்குறிச்சி,உல்லியக்குடி, வெண்மான்கொண்டான், மணகெதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவா், அரசின் நலத் திட்டங்களைக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் மற்றும் அதிமுக,தேமுதிக,பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.