அரியலூர்

வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் தயாா்

26th Dec 2019 06:30 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம் அரியலூா்,திருமானூா்,செந்துறை ஆகிய ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தோ்தலுக்கான வாக்குப் பதிவுக்குத் தேவையான பெட்டிகள்,அழியாத மை உள்ளிட்டவை அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் இருந்து டிச.26-ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஊரகப் பகுதி முழுவதிலும் வாக்குச் சாவடிகள் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு, அவை வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. வாக்குப் பதிவு முடிந்ததும் பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது. இரண்டாம் கட்ட தோ்தல் முடிந்த பிறகு ஜன 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT