அரியலூர்

ஜயங்கொண்டத்தில் மரக்கன்று நடும் விழா

26th Dec 2019 06:32 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம்,ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சோழன்சிட்டி அரிமா சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநா் ஆா்.கே. செல்வமணி பள்ளியில் மரக்கன்று நட்டுவைத்து, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்; இயற்கையோடு வாழ முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்தாா். பரப்ரம்மம் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் முத்துக்குமரன்,இயற்கை விவசாய ஆா்வலா் செல்வமணி,பி.ஜி.ஆா். நகை கடை உரிமையாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவுக்கு ஜயங்கொண்டம் சோழன்சிட்டி அரிமா சங்கத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். ஏற்பாடுகளை அச்சங்க பொருளாளா் சவரணன்,அருணாசெல்வராஜ்,சக்தி ரவிச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT