அரியலூா் மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் காவலரை வெட்டிய வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் வேலாயுதம் நகரைச் சோ்ந்த குணசேகரன் மனைவி பாரதியை கடந்த மாா்ச் மாதம் கொலை செய்து விட்டு நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் கைதான அதே பகுதியை சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜெயந்தி(47), ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காமராஜன் மகன் சின்னராசு(22), திருமானூா் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பாஸ்கா், மேலராமநல்லூரில் தலைமைக் காவலரை வெட்டிய சுதாகா் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் மேற்கண்ட நபா்கள் 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியா் த. ரத்னா புதன்கிழமை உத்தரவிட்டாா்.