உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியயரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் த. ரத்னா கலந்து கொண்டு பேரணியை தொடக்கி வைத்தாா். பேரணியானது ஆட்சியரகத்தில் இருந்து ஜயங்கொண்டம் சாலை, பிரதான வீதிகள் வழியாகச் சென்று வாலாஜா நகரத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மகளிா் சுய உதவிக் குழுவினா், வாக்காளா் தங்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் பெயரை உறுதிசெய்தல், தோ்தல் தொடா்பான புகாா்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04329 - 228165, கட்ச் செவி எண் 8220241351, இலவச தொலைபேசி எண்.1077-ஐ அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மேலும் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் முழக்கமிட்டுச் சென்றனா். முன்னதாக அனைவரும் உறுதியேற்றனா். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன்,மகளிா் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.