அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மன நலம் பாதிக்கப்பட்டவா் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
ஜயங்கொண்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவா் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாா். இதையறிந்த ஜயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி, சிறப்பு உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், பரப்பிரம்மம் பவுண்டேசன் நிறுவனத் தலைவா் த. முத்துக்குமரன், ராயல் அரிமா சங்க பொறுப்பாளா்கள் சிவகுமாா், சண்முகம் , அறிவழகன், அன்பரசன், ஆறுமுகம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டு விளாங்குடியிலுள்ள வேலா கருணை இல்ல விடுதி காப்பாளா் விமலாதேவியிடம் ஒப்படைத்தனா்.