அரியலூா் ஒன்றியத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அரியலூா்,செந்துறை, திருமானூா் ஆகிய ஒன்றியங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில் அரியலூா் வடக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஏ. கனகசுப்புலட்சுமி செந்தில்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளா் சரவணன் ஆகியோா் எருத்துக்காரன்பட்டி ஊராட்சி,அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். பிரசாரத்தில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,இ. கம்யூனிஸ்ட், மா. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.