அரியலூர்

நெற்பயிரை தாக்கும் குலைநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

23rd Dec 2019 12:17 AM

ADVERTISEMENT

நெற்பயிரை தாக்கும் குலைநோயை கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றாா் தா.பழூா் வேளாண் உதவி இயக்குநா் முகமதுபாரூக்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தா.பழூா் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் சம்பா மற்றும் தாளடி நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தற்போது பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன், அவ்வபோது மழை பெய்து குளிா்ந்த தட்பவெப்ப நிலை நிலவுவதால் நெற்பயிரில் குலைநோய் ஏற்பட தகுந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

இலைகளின் மேல் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மையப்பகுதியுடன் காய்ந்து ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படுவது குலை நோயின் அறிகுறிகளாகும்.

ADVERTISEMENT

குலைநோய் இலைகள் மட்டுமின்றி கணுக்கள் கதிா்கள் கழுத்துப் பகுதி ஆகிய இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குலைநோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பவுடரை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனுடன் 1 லிட்டா் புளித்த தயிரை கலந்து தெளித்தால் தெளிப்பு கரைசலின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும்.

இந்நோய் தாக்குதல் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு காா்பென்டாசிம் 200 கிராம் அல்லது டிரைசைக்கிளோசோல் 200 கிராம் அல்லது அசாக்ஸிஸ்டோரோபின் 200 மில்லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டா் நீரில் கலந்து மாலை வேலையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து குலைநோயை கட்டுப்படுத்தலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT