அரியலூர்

அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம்

23rd Dec 2019 12:18 AM

ADVERTISEMENT

அரியலூா் மற்றும் திருமானூா் பகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் பொ.சந்திரசேகா், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் அகிலாண்டேஸ்வரி ஆகியோரை ஆதரித்து எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டபோது அவா் பேசியது:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விட்டுச் சென்ற நலத்திட்டங்களை தற்போதைய முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இந்தத் திட்டங்களெல்லாம் அனைவருக்கும் முழுமையாக வந்துசேர அதிமுக வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பின்னா் அவா் திருமானூா் மேற்கு மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தனலட்சுமி சக்திவேல், கிழக்கு மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் உஷா சரவணன் ஆகியோரை ஆதரித்து வாரணவாசி, பாா்ப்பனாச்சேரி,கீழப்பழுவூா், மேலப்பழுவூா், வேப்பங்குழி, கோக்குடி, பூண்டி, கோக்குடி, வேட்டக்குடி, ஆங்கியனூா், பளிங்காநத்தம், விளாகம், திருமானூா், காரைப்பாக்கம், சேனாபதி, கீழக்காவட்டங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா்.

ADVERTISEMENT

பிரசாரத்தில் அதிமுக, தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT