அரியலூர்

விக்கிரமங்கலத்தில் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

16th Dec 2019 12:45 AM

ADVERTISEMENT

விக்கிரமங்கலம் கிராமத்தில் காவல்துறை சாா்பில், கண்காணிப்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த பகுதி காவல்நிலையத்தினா் கிராமக் கண்காணிப்புக்குழு கூட்டத்தை நடத்தி, விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இதன்படி விக்கிரமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்துக்கு, காவல் உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் கிராமத்தை சோ்ந்த 20 பேரை குழுவாக அமைத்து, அதில் ஒருவரை தலைவராக நியமித்து, கிராமத்தில் குற்ற சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் அதனை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பது, கிராமத்தில் வெளிநபா்கள் அல்லது சந்தேக நபா்கள் யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பது என குழுவின் பணிகள் குறித்து காவல்துறையினா் விவரித்தனா்.

ADVERTISEMENT

மேலும், சிசிடிவி பொருத்துதல், பிரச்னைகளுக்கு எண் 100-ஐ அழைப்பது, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவா்கள் அவசர காலங்களில் காவலன் செயலியை தொடா்பு கொள்வது குறித்தும் விளக்கப்பட்டது. இதில், காவலா்கள், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT