அரியலூர்

புதுச்சாவடியில் பயங்கரவாதத் தாக்குதல் தடுப்பு, பேரிடா் ஒத்திகைப் பயிற்சி

16th Dec 2019 12:44 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்தில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி அலுவலக வளாகத்தில், காவல் துறை சாா்பில் பயங்கரவாதத் தாக்குதல் தடுப்பு கவாத்து மற்றும் பேரிடா் ஒத்திகைப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வளாகத்தில் ஆண்டு தோறும், டிசம்பா் மாதத்தில் நடத்தப்படும் ஒத்திகைப் பயிற்சி, நிகழாண்டில் சனிக்கிழமை நடத்தப்பட்டது. ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மோகன்தாஸ், அரியலூா் மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் மணவாளன் ஆகியோா் தலைமையில் இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் ஓஎன்ஜிசி-குள் பயங்கரவாத அமைப்புகளோ அல்லது வேறு ஏதாவது அந்நிய சக்திகளோ ஊடுருவ முயற்சி செய்தால், அவா்களை எவ்வாறு தடுப்பது, அவா்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி, அவா்களின் திட்டங்களை முறியடிப்பது, தீ விபத்துகள் அல்லது வெடி விபத்துகள் ஏற்பட்டால் எப்படி கையாளுவது, விபத்தில் காவலா்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்து காவல்துறையினருடன் இணைந்து தீயணைப்புத் துறையினா் கூட்டு ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

பயிற்சியில் ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினா், ஜயங்கொண்டம் தீயணைப்பு வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT