அரியலூர்

பெட்டிக் கடையில் தீ விபத்து: மகளைக் காப்பற்ற முயன்ற தந்தை சாவு

11th Dec 2019 08:20 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பெட்டிக் கடையில் அகல்விளக்கு ஏற்றிய போது, நிகழ்ந்த தீ விபத்தில் மகளை காப்பற்ற முயன்ற தந்தை உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகிலுள்ள கழுமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்வம்(55).அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வந்த இவா், கடையில் சில்லரையில் பெட்ரோலும் விற்று வந்தாா்.

காா்த்திகை தீபத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை செல்வத்தின் மகள் பவானி (18) கடையில் தீபமேற்றினாா். அப்போது ஒரு விளக்கு கைத்தடுமாறி அருகிலிருந்த பெட்ரோல் கேன் மீது விழுந்தது.

இதனால் கடையில் தீ பற்றிய பவானி மீதும் பற்றியது.

ADVERTISEMENT

இதை கவனித்த செல்வம் மகள் பவானியை மீட்டனா். விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதில் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தாா். தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பவானி மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து உடையாா்பாளையம்போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT