அரியலூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைசெயல்படுத்த வலியுறுத்தல்

11th Dec 2019 08:24 AM

ADVERTISEMENT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் தெற்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இக்கூட்டமைப்பின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் விருத்தகாசி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மகாராசன், செங்கமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் அண்ணாமலை திருக்கு விளக்கம் அளித்தாா். சோமசுந்தரம் குறிஞ்சா இலையின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.பென்சனா் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

நிா்வாகிகள் பெரியசாமி, ராமசாமி, முருகேசன் , மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். நிறைவில் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT