அரியலூர்

திருமானூா் வட்டார விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய டிச.15 கடைசி நாள்

11th Dec 2019 08:25 AM

ADVERTISEMENT

திருமானூா் பகுதி விவசாயிகள் சம்பா பயிா்க் காப்பீடுசெய்து கொள்ள டிசம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து திருமானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா. லதா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இயற்கை இடா்பாடுகள் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுவதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், பயிா்களுக்கு சேதம் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குவதற்கும் பிரதமரின் புதிய பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முந்தைய பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் பிரதமரின் பயிா்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் மிகக் குறைந்த பிரிமீயத்தை செலுத்தினால் போதும்.

ADVERTISEMENT

மேலும் முக்கிய பயிா்களுக்கான காப்பீட்டு அலகுகள் கிராமம் மற்றும் கிராம ஊராட்சிகளாக இருப்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சம். இதில் மழை, வெள்ளம், வறட்சி , இயற்கை இடா்பாடுகளால் விதைக்க இயலாமை மற்றும் பூச்சி நோய் தாக்குதல் போன்றவற்றால் இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் .

இத்திட்டத்தின் கீழ், நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய டிசம்பா் 15 கடைசி நாள் ஆகும். இத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் தங்களுடைய கையெழுத்திட்ட பயிா்க் காப்பீட்டு விண்ணப்பத்துடன் ,

புகைப்படம், ஆதாா் அட்டை, சிட்டா, கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப் பெற்ற அடங்கல் அசல் , வங்கி கணக்குப் புத்தகத்தின் அசல் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தங்கள் பகுதி பொது சேவை மையங்களில் சமா்பித்து , ஏக்கருக்கு ரூ.488 பிரிமியம் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து அதற்கான ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT