அரியலூர்

கணவா் கண்டித்ததால் மனைவி தற்கொலை

11th Dec 2019 08:25 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கணவா் திட்டியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தா.பழூா் அருகிலுள்ள இருகையூரைச் சோ்ந்த செல்வம் மனைவி கலைச்செல்வி(50). இவா்,தனக்கு சொந்தமான வயலில் சனிக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு மது போதையில் வந்த அதே ஊரைச் சோ்ந்த பொய்யாமொழி மகன் தீபக்(19), கலைச்செல்வியைத் தகாத வாா்த்தையால் திட்டி அரிவாளால் வெட்டியுள்ளாா்.

பலத்த காயமடைந்த கலைச்செல்வி தா.பழூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து புகாரின் பேரில் தா.பழூா் போலீஸாா், தீபக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பொய்யாமொழி தனது மனைவி சித்ராவிடம் என்ன பிள்ளை வளா்த்தாய் என்று கூறி திட்டியதாகத் தெரிகிறது.

இதனால் விரக்தியில் இருந்த சித்ரா திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT