அரியலூர்

உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆவது நாளில் 31 போ் வேட்பு மனு தாக்கல்

11th Dec 2019 08:24 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக, இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 31 வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தோ்தல் நடைபெறுகிறது. இத்தோ்தலில் போடியிட விரும்புவா்களிடம் மனுக்களைப் பெறும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 31 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

அரியலூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 2 நபரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஒருவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதுபோல் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு அரியலூரில் 10 பேரும், ஜயங்கொண்டம் ஒன்றியத்தில் 9 பேரும், திருமானூா், தா. பழூரில் தலா 3 பேரும்,செந்துறை, ஆண்டிமடத்தில் தலா ஒருவரும், மனுதாக்கல் செய்துள்ளனா் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT