அரியலூர்

இலவசத் தொழில்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

11th Dec 2019 08:25 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் தொழில்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து இந்த மையத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் பற்றவைப்பு, எலக்டிரிக்கல், மோட்டாா் ரீவைண்டிங், பிளம்பிங்,செல்லிடப்பேசி, கணினி வன்பொருள்,நெட்வொா்க்கிங் மற்றும் கோழி வளா்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொடங்கவுள்ளன. தங்குமிட வசதி மற்றும் மூன்று வேலை உணவுடன், எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவிகித செய்முறை மற்றும் கோட்பாடு வழி பயிற்சியளித்து, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் வங்கிகளில் கடன் பெற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. எனவே அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வரையுள்ளவேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

5 பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் இயக்குநா், பாரத ஸ்டேட் வங்கியின் இந்திய ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம்,வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம், திருச்சி சாலை,கீழப்பழுவூா்-621707 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9944850442, 9626497684, 9445860181 ஆகிய செல்லிடப் பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT