அரியலூர்

அரியலூர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

29th Aug 2019 08:00 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரர், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய கார்கோடேஸ்வரர், திருமானூர் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர்,செந்துறை பெரியநாயகி உடனாய சிவதாண்டேஸ்வரர் போன்ற சிவாலயங்களில் வழிபாடு நடைபெற்றது.

அரியலூர், உடையார்பாளையம், ஜயங்கொண்டம்,விக்கிரமங்கலம்,சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி,தா.பழூர் உள்ளிட்ட பகுதி சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT