உடையார்பாளையம் அருகே மாயமான இளம் பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29), விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள்(28) . இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் விரக்தியில் இருந்த மாரியம்மாள் கடை தெருவுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் அதன் பிறகு வரவில்லை. இவரது கணவர் மணிகண்டன், தனது உறவினர், நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் மாரியம்மாள் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.