அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில்,பொதுமக்களிடமிருந்து 867 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் டி.ஜி. வினய் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்ற 867 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, உடையார்பாளையம் பேரூராட்சி சார்பில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் துப்புரவு பணியாளருக்கான ஆணையை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கா. பொற்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.