அரியலூர்

அரசுப் பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

23rd Aug 2019 09:39 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வாரணவாசி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆயுத திட்டத்தின் கீழ் கீழப்பழுவூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். திருமானூர் சித்த மருத்துவர் பழனிசாமி, மாணவர்களுக்கு ரத்தசோகை உள்ளிட்ட நோய்கள் குறித்தும், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் சரி செய்யும் முறைகள்,சித்த மருத்துவ வழிமுறைகள் குறித்துப் பேசினர். முகாமில், மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
இதேபோல் விழுப்பணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மருத்துவமுகாம் நடைபெற்றது. திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய  சித்த மருத்துவர் பழனிசாமி தலைமை வகித்து மாணவர்களிடையே சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். 
பள்ளி தலைமை ஆசிரியர் கிளாடிஸ் கலாவதி முன்னிலை வகித்தார். முகாமில் மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மருந்தாளுநர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT