அரியலூர்

அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் மாலை

18th Aug 2019 04:47 AM

ADVERTISEMENT


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு அக்கட்சியினர் சனிக்கிழமை மாலை அணிவித்தனர். 
திருமானூர் பேருந்து நிலைய அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் நகரத் தலைவர் ஜெய்கணேஷ், ஒன்றியச் செயலர்கள் எசனை கண்ணன், சுள்ளங்குடி கண்ணன், துணை பொறுப்பாளர்கள் இளையராஜா, சுரேஷ், சிவன்ராஜ், முத்துப்பாண்டி,கமல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மாவட்டச் செயலர் செல்வநம்பி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தும்,  இனிப்பு வழங்கினர். இதேபோல ஜயங்கொண்டம்,தா.பழூர்,செந்துறை,மீன்சுருட்டி,ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT