அரியலூர்

குறிச்சி நில மக்கள் பேரவை பொதுக் கூட்டம்

11th Aug 2019 04:45 AM

ADVERTISEMENT


அரியலூர் அண்ணாசிலை அருகே குறிஞ்சி நில மக்கள் பேரவை சார்பில் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, குறிச்சி நில மக்கள் பேரவையின் மாநிலச் செயலர் துரை தலைமை வகித்து பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன் பங்கேற்று பேசினார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர்கள் மருதவாணன், இலக்கியதாசன், மாநில விவசாய தொழிலாளர் விடுதலை முன்னனி  நிர்வாகி கருப்புசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஆக. 9ஆம் தேதியை உலக பழங்குடியினர் தினமாக  அறிவித்த ஐ.நா சபைக்கு நன்றி தெரிவிப்பது, நரிக்குவர்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு சாதி சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT