அரியலூர்

உடையார்பாளையம் அருகே விவசாயி தற்கொலை

11th Aug 2019 04:45 AM

ADVERTISEMENT


உடையார்பாளையம் அருகே பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்ட  விவசாயி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார். 
 உடையார்பாளையம் அருகேயுள்ள ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து(45) விவசாயி. இவர் குடும்ப பிரச்னை காரணமாக விரக்தியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த முத்து அங்கு சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT