கட்செவி மூலம் தகவல் பரப்பியவர் கைது

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கட்செவி மூலம் தகவல் பரப்பியவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கட்செவி மூலம் தகவல் பரப்பியவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
செந்துறையை அடுத்த பொன்பரப்பியில் நிகழ்ந்த வன்முறை குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், கடந்த 19 ஆம் தேதி அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்தை தேர்தல் முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கிவிட்டனர். அனைவரும் வாருங்கள், அதனை தட்டிகேட்க வேண்டும் என்றும் கட்செவியில் பரப்பினாராம். இதுகுறித்து தளவாய் போலீஸார் வழக்குப்பதிந்து, வெற்றிச்செல்வனை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com