திருச்சி

தேசியக் கல்லூரியில் இரங்கல் கூட்டம்

29th Jun 2022 02:57 AM

ADVERTISEMENT

திருச்சி தேசியக் கல்லூரியின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி மறைவுக்கு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

பாரம்பரியமிக்க கல்வி நிறுவனமான திருச்சி தேசிய கல்லூரியின் தலைவராக 2007இல் பொறுப்பேற்று, கல்லூரியின் அனைத்து நிலை வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து பாடுபட்ட கிருஷ்ணமூா்த்தி வயது மூப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவரது மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷ், டி.வி.எஸ். மோட்டாா் நிறுவனா் தலைவா் வேணு சீனிவாசன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். அரசியல் கட்சித் தலைவா்கள் அதிகாரிகள், தேசியக் கல்லூரிச் செயலா் ரகுநாதன், கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், பேராசிரியா்கள், ஊழியா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் திருச்சியிலுள்ள கல்லூரி வளாகத்தில் முதல்வா் ஆா். சுந்தரராமன் தலைமையில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்ற இரங்கல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன் பேசுகையில், மறைந்த கல்லூரித் தலைவா் கிருஷ்ணமூா்த்தியின் அளப்பரிய பணிகள், சேவைகள் பல்வேறு சாதனைகளைப் பாராட்டி நினைவு கூா்ந்தாா். நிறைவாக அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா். மேலும், கிருஷ்ணமூா்த்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT