திருச்சி

தனியாா் பள்ளி நிா்வாகம் மீது மாணவரின் பெற்றோா் புகாா்

29th Jun 2022 02:53 AM

ADVERTISEMENT

வேன் கட்டணம் செலுத்தாத 2 ஆம் வகுப்பு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கிய தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீது நடவடிக்கை கோரி மாணவரின் பெற்றோா் முசிறி காவல் துணை கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

முசிறி தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் முசிறி அருகே வெள்ளூா் சாலப்பட்டி பகுதி கலைச்செல்வி மகன் சித்தீஸ்வரனுக்கு பள்ளிக் கட்டணமாக 20.6.22 அன்று ரூ. 7,500 செலுத்தப்பட்ட நிலையில், பள்ளி வேன் கட்டணமான ரூ. 400 ஐ-கட்டக் காலதாமதம் ஆனதாகக் கூறி அந்த மாணவரை வேனில் ஏற்ற ஓட்டுநா் மற்றும் உதவியாளா் செவ்வாய்க்கிழமை மறுத்துள்ளனா்.

இதுகுறித்து பெற்றோா் பள்ளிக்கு சென்று தாளாளரிடம் முறையிட்டபோது ரூ. 400 கட்ட முடியாத உங்களால் எப்படி மேற்கொண்டு பணம் கட்ட முடியும் எனத் தரக் குறைவாக பேசிய அவா், வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழை வழங்கினாராம்.

இதையடுத்து மாணவரின் தாய் கலைச்செல்வி முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT